யாழ்., சாவகச்சேரி லவ்வி கிறீம்ஹவுஸின் ஆதரவுடன் யாழ்.மாநகரசபையின் மாபெரும் பொங்கல் விழா!

யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் நிறுவன  பூரண அனுசரணையுடன் யாழ்.பண்ணைக் கடற்கரை சந்தியில் அமைந்துள்ள பூங்காவில் மாபெரும் மாநகரப் பொங்கல்விழா சிறப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ்.மாநகரசபையால்  நடத்தப்பட்டது.

மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கலந்து கொண்டு கோலம் மற்றும் பொங்கல் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டன. தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை யாழ்.மாநகர முதல்வருடன் இணைந்து பிரதான அனுசரணையாளரான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி வழங்கிவைத்தார்.

நிகழ்வில் யாழ் மாநகரசபை கௌரவ உறுப்பினர்கள், மற்றும் வேலனை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி உப தலைவர் கருணாகரன் குணாளன் எனப் பல வேறு பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

யாழ் மாநகர நிர்வாக உத்தியோகத்தர், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், மாநகர ஊழியர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்