மன்னாரில் குடைசாய்ந்த வாகனம் – சாரதி படுகாயம்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழிவு மீன்களை ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனம் (cooler) ஒன்றே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி குறித்த குளிரூட்டி வாகனம் பயணித்துள்ளது. குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மன்னார் பிரதான பாலத்தினூடாக பயணித்த குறித்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு விலகி, மீண்டும் வந்த திசையை நோக்கி குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தின்போது காயமடைந்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்