ஐ.தே.க.வின் அமைப்பாளர்களுக்கு சஜித் அவசர அழைப்பு

அனைத்து ஐ.தே.க.அமைப்பாளர்களையும் உடனடியாக கொழும்பிற்கு  இன்று (செவ்வாய்க்கிழமை)  வருகை தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் சஜித் முக்கியமான சில முடிவுகளை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை  சஜித்தின் தலைமையில் அமைப்பாளர்கள் கூட்டம் இடம்பெறுவது தொடர்பாக தனக்கு அறிவிக்கப்படவில்லையென  கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்