மத்தியை ஆள்பவர்கள் பேச்சும் செயலும் வேறு!

கடந்த அரசும் செய்தது அதுவே
கடுமையாகச் சாடுகிறார் சரா!

மத்தியில் ஆட்சிக்குவரும் அரசு தமிழ் மக்களது விடயத்தில் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகவே இருக்கின்றதாகச் சாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அதுவே கடந்த அரசின் கல்முனை விவகாரத்திலும் மீனவர் விவகாரத்திலும் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சினை கள் தொடர்பில் நாம் பேசுகின்றபோது அதற்குச் சாதகமாகப்பதிலளிக்கும் அரசு, அதனை நடைமுறைப்படுத்தும்போது பின்வாங்கும் நிலைமைகளே கடந்த அர சில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தின் ஏற்பாட்டில் வட மாகாணக் கடற் தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் வடக்கு மாகாண நிலையான மீன்பிடிக் கைத் தொழில் தொடர்பானவட்டமேசைக் கலந் துரையாடலொன்றுயாழ். ரில்கோஹோட் டலில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உரையாற் றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் – வடக்குமாகாணத்திலுள்ள கடற்தொழி லாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பிரச் சினைகளால் வாழ்வாதார ரீதியாகவும் பலபாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் நான் பேசியி ருக்கின்றேன். இதற்கு மேலாகச் சம் பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனுடம் பேசி மீனவர்களின் கோரிக்கைகள் சம் பந்தமாகப் பலகடிதங்களையும்கொடுத் துள்ளேன்.

கடற்தொழில் சம்பந்தமாக இன்று இந்த நாட்டில் இருக்கும் சட்டங்கள்கூட உரிய முறையில் நடைமுறைப்படுத்தப் படவில்லை . அதனால் தான் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியி ருக்கின்றது. குறிப்பாக பாதிப்பு என்கின்ற போது வெளிமாவட்டங்களிலில் இருந்த வரும்மீனவர்களால்தான் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

இந்தப்பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பல தடவைகள் அமைச்சரிடமும் அரசிட மும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்படாம லேயே இருக்கின்றன.

ஆகவே ஒருவிடயத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டும். அதாவது மீனவர் பிரச்சினை உட்பட தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் அரசுடன் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்

சர்களுடன் பேசுகின்றபோது சாதகமான பதில்களையே வழங்குவார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் நேரத்தில் எங்களது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

அவ்வாறு எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்ப டுவது அல்லது நடைமுறைப்படுத்துவது என்பது மிக மிகக் குறைவாகவே இருக் கின்றது. இதில் குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தைக் குறிப்பிடலாம். அதாவது அரசுக்கு எதிரான பிரேரணையொன்றுவந்தபோது நாங்கள் வாக்களிக்கப் போகாமல் இருந்தோம். ஆனால் உடனடியாகச்செய்து தருவதாகச் சொல்லப்பட்டு பல கடிதங்கள் பரிமாறப் பட்டுகோரிக்கை நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் அதன் பின் ஏதுமே நடக்க வில்லை. இன்றுவரை நடக்காத நிலையே தொடர்கிறது. இப்படிதான் நாங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் செய்வதாகச்சொல் வார்கள். ஆனால் அதனை ஒப்பேற்றிக் கொடுக்கமாட்டார்கள். அதிலிருந்து பின் வாங்கிவிடுவார்கள். இது தான் தமிழ் மக்களின் பலவிடயங்களிலும் நடக்கின் றது. இவ்வாறான நிலையில்தான் புதிய தொரு அரசும்வந்திருக்கிறது. அவர்களும் இவ்றையெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்