மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் விரைவில் பிரதேச சபை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கோரிக்கைகளில்
ஒன்றான மடு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு பிரதேச சபையை உருவாக்க அரசாங்க
அதிபருடன் தொடர்பு கொண்ட பின் நிலஅளவையாளர்களைக் கொண்டு விரைவில் இப்
பகுதியில் பிரதேச சபை உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி
பி.எஸ்.எம்.சாள்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

2019 ம் ஆண்டு மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
12 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின்
நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன்  உப அலுவலகம் நேற்று திங்கள் கிழமை
(27.01.2020) நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்Nஐhதி
தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனின் பங்குபற்றுதலுடன் வட
மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன்,
செல்வம் அடைக்கலநாதன், திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வட மாகாண
உள்ளூராட்சி அமைச்சு செயலாளர் திருமதி ச.மோகநாதன் உட்பட பலர் இவ்
நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்

உள்ளூராட்சித் திணைக்களம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு
உரையாற்றியவர்கள் தெரிவித்து சென்று விட்டனர். ஆகவே இதைப்பற்றி நான்
தொட்டுச் செல்லாது இங்கு என் முன்னிலையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு
நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.

அதற்கு முன் நான் இரண்டு விடயங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

பிரதேசப் பகுதியில் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் உத்தரவாத விலையை
ஜனாதிபதி தற்பொழுது நிர்ணயித்துள்ளார்.

இவற்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நெற்கொள்வனவு
செய்யும் திணைக்களத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை கண்காணிக்கும்படி அனைத்து ஆளுநர்களுக்கும் ஜனாபதி
கோரிக்கையிட்டுள்ளார்.

இவ் நெல்லின் உத்தரவாத விலை கிலோ 50 ரூபாவாகவும் ஈரப்பற்றுள்ள நெல்லை
கிலோ 47 ரூபாவாகவும் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பிரதேசத்திலுள்ள கூட்டுறவு
திணைக்களத்தையும் அரசாங்க அதிபரையும் இணைத்து உடனடியாக நெற்கொள்வனவு
செய்யும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் திணைக்களம் காலம் தாழ்த்தி
வருகின்ற முறைமையை நான் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் கண்டுள்ளளேன்.

ஆகவே இந்த நிலை உருவாகாது உடனடியாக பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினூடாக இவ்
நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதுபோன்று இம்முறையும்
அவ்வாறான நடவக்கையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி நான் எனது
செயலாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

தற்பொழுது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் இளைஞர்
யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தற்பொழுது விண்ணப்பப்
படிவங்கள் கோரப்பட்டுள்ளது.

இது சகல பத்திரிகைகளிலும் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ந் திகதிக்கு முன்னர் எட்டாம் ஆண்டுக்குள்
படித்தவர்கள் இவ் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கிராம
அலுவலகர்களிடம் சமர்பிக்க வேண்டும்.

ஆகவே இளைஞர் யுவதிகள் இவ் சந்தர்ப்பத்தை நழுவ விடாது கவனத்துக்
கொள்ளுங்கள். இது வயது எல்லை கவனிக்காது வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு
உள்வாங்கப்படும் ஓர் திட்டமாகும்.

இங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மூன்று
கோரிக்கைகளை என் முன் வைத்துள்ளார். அதாவது 2019 ஆம் ஆண்டு நடைபெற்று
முடிவுற்ற வேலைத் திட்டங்களுக்கான கொடுப்பனவு இங்கு மட்டுமல்ல நாடு
பூராகவும் கொடுபடாது இருந்து வருகின்றது.

இருந்தபோதும் கடந்த வாரம் நாங்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது
கலந்துரையாடியுள்ளோம். மே மாதம் வரைக்கும் காலதாமதம் ஏற்படுகின்றபோதும்
இவ் நிதிகளை விடுவிக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

இரண்டாவதாக மாகாண சபைகளுக்கு நிதி வழங்குகின்ற குறைபாடானது நான் நன்கு
அறிவேன். வடக்கு கிழக்கு மாகாணத்தில் 30, 40 வருடங்களின் யுத்தத்துக்குப்
பின் இவ் இரு மாகாணங்களும் நிமிர முடியாத நிலையில் இருக்கின்றன.

பொதுவாக நிதி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நிதியைக் கொண்டு இவ் பகுதியில்
வீதிகளையோ அல்லது குளங்களையோ அபிவிருத்தி செய்வதென்பது நினைத்து பார்க்க
முடியாது.

நான் சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளராக இரண்டு வருடங்கள்
கடமையாற்றியிருக்கின்றேன். எனக்கு நன்கு தெரியும் அரசாங்கத்துக்கு ஒரு
மாதத்துக்கு ஒரு வருடத்துக்கு எவ்வளவு நிதி வருகின்றது என்று.

அதாவது 2018 ஆம் ஆண்டு மட்டும்தான் வருடத்தில் 975 பில்லியன் வருமானமாக
வந்துள்ளது. இப்பொழுது இவ் நிதியில் பாரிய வீழு;ச்சி ஏற்பட்டுள்ளது என
தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு காரணம் வரி விதிப்பு அனைத்தும் குறைக்கப்பட்டதாலேயே இவ் நிலை
உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் நிதி நிலைமை 67 வீதமான நிதியை சேகரித்துக்
கொடுக்கின்ற நிறுவனத்தில் நான் தலைமை தாங்கி கடமையாற்றியிருந்த
காரணத்தினால் இதன் தன்;மை எனக்கு நன்கு புரியும்.

நான் கடந்த வாரம் நடாத்திய மாகாண சபை கூட்டத்தில் எனது செயலாளர்களுக்கு
தெரிவித்து இருக்கின்றேன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
திருத்தப்படும் வீதிகள் அனைத்தையும் அடையாளப்படுத்தி அதற்கான
மதிப்பீடுகளை மேற்கொள்ளும்படி கேட்டுள்ளளேன்.

இதேபோன்று உள்ளூராட்சி திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து வீதிகளையும்
அடையாளப்படுத்தி அவைகளை எவ்வாறான விதத்தில் செய்யப்பட வேண்டும் என்ற
திட்ட அறிக்கையாக சமர்பிக்கும்படி வேண்டியுள்ளேன்.

இவ் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் வெளிநாட்டு நிதியூடாக இவ் திட்டங்களை
அமுல் செய்ய எனது முயற்சியை நான் மேற்கொள்வேன்.

அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் மூன்றாவது
கோரிக்கையாக மடு ஒரு பிரதேச செயலாளர் பிரிவாக இருக்கின்றபோதும் அங்கு
பிரதேச சபை ஒன்று கிடையாது என தெரிவித்ததை நான் பிரதம செயலாளரிடம்
வினவியபோது அது பூர்த்தியடைந்த நிலையில் அரசாங்க அதிபரிடம் இருப்பதாக
தெரிவித்தார்.

இதை விரைவில் மன்னார் அரசாங்க அதிபருடன் கதைத்து நில அளவையாளர்களைக்
கொண்டு  நிவர்த்தி செய்ய நான் முயலுவேன்.

நான் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும்
நாங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கின்றோம். ஏனென்றால் 30 வருட
யுத்ததிலிருந்து மீண்டுள்ள உங்களை தலைநிமிர்ந்து நிற்க வைக்கும்
நோக்குடனே ஆகும்.

ஆனால் உள்ளூராட்சி மன்றங்களை சார்ந்துள்ள நீங்கள் இங்குள்ள மக்களோடு
மக்களாக இருந்தவர்கள். அவர்களுடன் வாழ்ந்தவர்கள்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வேறுபாடு, கட்சி வேறுபாடு இன்றி
உங்களுக்கு வழங்கப்பட்ட காலத்தில் நீங்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய
சேவையை செய்ய வேண்டும்.

இங்கு நான் உங்களுக்கு ஒரு வேடிக்கையான விடயத்தை சொல்ல வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் மாநகர சபையைப்பற்றி அங்குள்ள மக்கள் என்னிடம் கூறியது
இவர்கள் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளை
எடுத்து வந்ததாகவும் மற்றையவர்களின் வீடுகளில் குப்பைகளை சேகரிப்பது
இல்லையென்றும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு குப்பை சேகரிப்பதிலும் அரசியல் சாயம்
பூசப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான விடயம் இல்லை.

நான் அவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை என்னவென்றால் மக்கள் பணத்தில்
சம்பளம் வாங்கும் நீங்கள் இவ்வாறு தொடர்ந்தால் சட்டத்தின்படி எதை செய்ய
வேண்டுமோ அது செய்யப்படும் என்றேன். உடன் அது நிவர்த்தி செய்யப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் தனிப்பட்ட குரோதம் காட்டாது
மக்களுக்கு நலனில் அக்கறையுள்ளவர்களாக செயல்பட வேண்டும்.

நாம் எல்லோரும் வெளிநாட்வர்கள் அல்ல. மாறாக நாம் இவ் மாகாணத்தைச்
சார்ந்தவர்கள். ஆகவே மக்களின் தேவை எது என இனம் காணும்போது அதை
மக்களுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

நான் வெகு விரைவில் பிரதேச, நகர சபை தலைவர்களை சந்திக்க இருக்கின்றேன்.
மக்களுக்காக இவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது.

வட மாகாணத்தில் என்ன தேவைகள் இருக்கின்றன. ஏதை முதல் செய்ய வேண்டும்
என்பதை அறிக்கையிடுமாறு செயலாளருக்கு நான் தெரிவித்துள்ளேன்.

இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொருவரினதும்
ஒத்துழைப்புடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படும் என இவ்வாறு
தெரிவித்தார்.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்