ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை நிராகரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றுவதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் ஐக்கிய முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னரே தமிழர் விடுதலை கூட்டணியாக பதிவு செய்யப்பட்டமையால், அது தொடர்பான அபிப்பிராயத்தினை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை வழங்குவது தொடர்பாக வீ.ஆனந்தசங்கரி எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயர் மாற்றம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்