போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக பிரசாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் வைத்தியர் டெனிஸ்டர் எல்.பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயமாகும்.

எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்கையில் மருந்துகள் விற்பனையாகின்றன. கொரோனா போன்ற வைரஸை நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகளினால் கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன் இந்த நோயை குணப்படுத்த என்னால் முடியும் என எந்தவொரு தனி நபரால் கூறப்பட்டாலும் விஞ்ஞான ரீதியாக அவ்வாறு முடியாது. சீன அதிகாரிகளும் அதற்கு இன்னமும் உரிய மருந்தினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.

நான் இலங்கை கடைகளில் லேபல் மாற்றி விற்பனை செய்யப்படும் மருந்துகளை அவதானித்தேன். அவற்றினை நம்பி ஏமாற வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்