சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!

மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மாந்தை ஆலய நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்தமைக்கு அமைவாக  எதிர்வரும் சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த தவணையின் போது, சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்ததன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்