இந்தியா சென்றுள்ள பிரதமருக்கு அமோக வரவேற்பு!

ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தினை நேற்றைய தினம் சென்றடைந்த பிரதமரை பிராந்திய Union Minister Sanjay dhotre வரவேற்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்த விஜயம் அமைவதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்