கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது.

நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் இதுவரை எதுவித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சி தனியாக களமிறங்கவுள்ளதாக கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்