இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஐந்து நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு புதுடில்லி விமான நிலையத்தில், மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தினை நேற்று சென்றடைந்த பிரதமரை, பிராந்திய அமைச்சரான சன்ஜய் தோட்ரே வரவேற்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது. பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷமேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்த விஜயம் அமைவதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்