ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பது குறித்து இதில் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியினையும் பிரதமர் வேட்பாளராக சஜித்தினை களமிறக்குவதற்கும் ரணில் அணி இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதியாக நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை இவர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்