நீ ஆம்பளையா டா? தர்ஷனுடன் ரகசிய உரையாடல்!… சனம் ஷெட்டியின் அதிரடி முடிவு

சமீபத்தில் தர்ஷனுடன் சனம் ஷெட்டி பேசுவது போன்ற ஓடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னை காதலித்து நிச்சயம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தர்ஷன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார் சனம் ஷெட்டி.

இதுகுறித்து தர்ஷனும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ள நிலையில், ஓடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா என சனம் ஷெட்டி தர்ஷனை திட்டுவது போன்று இருந்தது.

இந்நிலையில் பேட்டியளித்துள்ள சனம் ஷெட்டி, அந்த குரல் தன்னுடையது இல்லை என்றும், சட்டப்படி வழக்கு சென்று கொண்டிருக்கும் போது இப்படி பொய்யான ஓடியோவை வெளியிடுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்த ஒரு இடத்திலும் தர்ஷனின் கேரக்டரை பற்றி தவறாக பேசியதில்லை என்றும், உண்மையை அறியாமல் இந்த ஓடியோவை ஊடகங்கள் வெளியிட்டது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கேரக்டரை தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஓடியோ பரபரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்