கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை – ரஞ்சனின் குரல் பதிவுகள் குறித்து ஆராய்வு

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது தொடர்பாக நாளைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்