முன்னாள் தலைவர்கள் செய்த தவறையே கோட்டாவும் செய்கின்றார் – ஸ்ரீநேசன்!

1956 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் முன்னாள் தலைவர்கள் செய்த தவறையே, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்து வருகிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது சொல்லுகின்றார்கள் சிங்கள மொழியில் தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று.

அதேபோன்று 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பினை பற்றி சிந்திக்கின்ற போது அந்த அரசியல் யாப்புத்தான் தமிழ் இளைஞர்களுக்கு கூடுதலான பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்