நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்