மன்னாரில் 2ஆவது நாளாக இளைஞர் நாடாளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல்!

இளைஞர் நாடாளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழக இளைஞர்கள் 2ஆவது நாளாகவும் இன்று (புதன் கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் உட்பட்ட 18 வயது முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன் கிழமை குறித்த வேட்புமனுதாக்கல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் சிவராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த வேட்புமனுத் தாக்கலில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் யு.எல்.ஏ.மஜித்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி என்.பூலோகராஜா, தேசிய சமமேளன பிரதி நிதி ஜசோதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது வரை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 14 இளைஞர் யுவதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் 22 ஆம் திகதி அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், காலை முதல் மாலை 4 மணிவரை வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டு, முதன் முதலாக ஒன்லைன் மூலம் இந்த வாக்களிப்பு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்