செட்டிகுளம் கலைமகள் விளையாட்டுக் கழக 50 வது ஆண்டு நிறைவில் சத்தியலிங்கம்.!

செட்டிகுளம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா கழகத்தின் தலைவர் திரு.மயூரன் தலைமையில் கடந்த 04.02.2020 அன்று செட்டிகுளம் கலைமகள் கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமாகிய வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களில் ஒருவராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களும், கழக விசுவாசியும், எமது செட்டிகுளம் இணைப்பாளருமாகிய தே.சிவானந்தராசா(ஜெகன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கால்ப்பந்து மற்றும் கிரிக்கெற் சுற்றுப்போட்டிகளின் இறுதி ஆட்டங்களும் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக இக்கழகத்தின் நிரந்தர கட்டிடம் அமைப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மைதானத்தில் உள்ள செட்டிகுளம் பிரதேசசபைக்கு சொந்தமான பழைய கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னாள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்