பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தின் நீண்டகால குறையினை தீர்த்துவைத்த சாணக்கியன்

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் கல்வி மேம்பாட்டு பணிக்கு அமைவாக இந்த பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பெரியபோரதீவு பாரதி வித்யாலயா அதிபர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டார.;
இதன்போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரினால் பாண்ட் வாத்திய உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழுவினர்,பழைய மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக குறித்த பாடசாலையில் பாண்ட் வாத்திய உபகரணங்கள் இல்லாத குறை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினல் நீக்கப்பட்டுள்ளதாக இங்கு பாடசாலை சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்