வட மாகாண ஒப்பந்தக்காரர்களும் நன்மையடை வேண்டுமானால் சங்கத்தில் இணைய வேண்டிய அவசியம் உண்டு. வடமாகாணக் கிளை தலைவர் அ.அன்ரன் றோமன்ஸ் குரூஸ்

ஏனைய சங்கங்களுடன் ஒப்பிடும்போது நிர்மானிகள் சங்கத்தில் அங்கத்தவர்
பற்றாக்குறை நிலவுகின்றது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் நன்மையடை
வேண்டுமானால் எமது குரல் செவிசாய்க்கப்பட வேண்டுமானால் இவ் சங்கத்தின்
அங்கத்துவ பலம் அதிகரிக்கப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. ஆகவே
பிரதேசத்திலுள்ள அரசபதிவு பெற்ற எமது சங்கத்தில் அங்கத்தவம் பெற்றிராத
நிர்மான தொழில் துறையினைரையும் இணைத்து எமது சேவையினை அனைவருக்கும்
விரிவுபடுத்தி சங்கத்தின் சேவைபரப்பினை அதிகரித்து அதனை மேலும்
வளர்சிப்பாதையில் விரைவாக முன்னேற்ற வேண்டிய அவசியம் உள்ளது என இவ்
நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை  தலைவர் அ.அன்ரன் றோமன்ஸ் குரூஸ்
இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை இதன் தலைவர்
அ.அன்ரன் றோமன்ஸ் குரூஸ் தலைமையில் 2019 ஆம் ஆண்டு சிறந்த
ஒப்பந்தக்காரர்களுக்கான விருது வழங்கும் விழா திங்கள் கிழமை (10.02.2020)
பிற்பகல் மன்னாரில் மிக சிறப்பாக நடைபெற்றது. வட மாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களிலுள்ள ஒப்பந்தகாரர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை  தலைவர் அ.அன்ரன்
றோமன்ஸ் குரூஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்

தேசிய மற்றும் சர்வதேச அளவில் அபிவிருத்தி செயற்பாட்டில் முதன்மைபெறும்
துறையாக எமது நிர்மானத்துறை விளங்குகின்றமை மறுக்கப்பட முடியாத
உண்மையாகும்.

குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புக்களை கொண்டுள்ள இந்
நிர்மாணத்துறையானது இலங்கையில் மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன்
வடபுலத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சிகண்டு வருகின்றது.

அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகளிலொன்றான எமது இலங்கைத்தீவில்
நிர்மாண தொழில்துறையின் தேவைப்பாடு அதிகம் வேண்டப்படுகின்ற ஒன்றாகும்.

பல்வேறுபட்ட துணை தொழில்துறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நிர்மானத்துறை
எஎமது வடமாகாணத்திலும் பாரிய நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு
மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன்  பல இலட்சம்
குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு துணைபுரிகின்றது.

இது இத்துறைக்கு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு புரிவதில்லை.
காலத்துக்கு காலம் ஏற்படும் கட்டட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு,
திணைக்களங்களால் பேணப்படும் இறுக்கமான நடைமுறைகள், அரச கட்டுப்பாடுகள்,
கொடுப்பனவுகள் சட்டத்துக்கமைய  வழங்கப்படாமை, மூலப்பொருட்களின் விலை
நிர்ணயத்தில் செல்வாக்கு செலுத்தும் உள்ளக மற்றும் வெளியகக் காரணிகள்,
நாட்டின் அசாதாரண நிலமைகள் போன்ற பல்வேறு எதிர்பாராத நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் நிர்மானத்துறை ஒப்பந்தக்காரர்கள் இத் தொழில் துறையினை
முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அவ்வகையில் வடமாகாண நிர்மாண ஒப்பந்தக்காரர்களது நலனை அடிப்படையாகக்
கொண்டு செயற்படுகின்ற எமது சங்கமானது கடந்த 2019ம் வருடத்திலும்
பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை
மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய சங்கங்களுடன் ஒப்பிடும்போது எமது சங்கத்தில் அங்கத்தவர் பற்றாக்குறை
நிலவுகின்றது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் நன்மையடை வேண்டுமானால் எமது
குரல் செவிசாய்க்கப்பட வேண்டுமானால் இவ் சங்கத்தின் அங்கத்துவ பலம்
அதிகரிக்கப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.

பிரதேசத்திலுள்ள அரசபதிவு பெற்ற எமது சங்கத்தில் அங்கத்தவம் பெற்றிராத
நிர்மான தொழில் துறையினைரையும் இணைத்து எமது சேவையினை அனைவருக்கும்
விரிவுபடுத்தி சங்கத்தின் சேவைபரப்பினை அதிகரித்து அதனை மேலும்
வளர்சிப்பாதையில் விரைவாக முன்னேற்றுவதே எமது உடனடி இலக்காகும் என
இவ்வாறு தெரிவித்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்