தரிசான வயற்காணிகளை பயிரிடும் வேலைத்திட்டம் மருதங்கேணி பகுதியில் அங்கஜன் எம்.பியால் ஆரம்பம்

நாடு பூராகவும் கைவிடப்பட்ட காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் “பயிர்செய்கையின் சுபீட்சம்” எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் ஆரம்பமான “தரிசான வயற்காணிகளை பயிரிடும்” வேலைத்திட்டம் கடந்த 30ம்திகதி நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 11.02.2020 செவ்வாய்கிழமை மருதங்கேணி செம்பியன்பற்று பகுதியில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் கமத்தொழில் பிரதியமைச்சருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கமநல சேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்