இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானம்! கொழும்பு வந்த குழுவினர் சம்பந்தனுக்கு வாக்குறுதி

இலங்கை தொடர்பில் தமது நிலைப் பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படுத்தப் படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதி யளித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நாடாளு மன்றத்தில் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப் பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலை மையிலான குழுவினரே மேற் படி வாக்குறுதியைச் சம்பந்தனி டம் தெரிவித்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

இந்தச் சந்திப்பின்போது கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக முன்னெடுக் கப்பட்ட பல்வேறு நடைமுறை கள் தொடர்பில் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார். இலங்கை அரசானது ஐரோப் பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளு டனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்த போதும் அவற்றை நிறைவேற்றத் தவறி யுள்ளமையையும் அவர் சுட்டிக் காட்டினார். விடுதலைப்புலிகள் தோற் கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப் படலாகாது என்றும் போராட்டம் தமிழ் மக்களினு டையது, எனவே, ஒன்றிணைந்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத நாட் டினுள் அதிகாரப் பரவலாக்கல் என்ற தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றும் – இந்தச் சந்திப்பின் போது இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். இலங்கை அரசு கொடுத்த இந்த வாக்குறுதிகளை சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண் டும் எனவும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதி யானது இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளில் இருந்து வில கிச் செல்வதற்கு இன்னும் ஊக் கத்தைக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸி லின் தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்று வதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலி யுறுத்திய இரா.சம்பந்தன், விசேட மாக இறுதிக்கட்டப் போரின்போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் அரச அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப் பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்படியானவர்கள் காணா மல் போயிருந்தால் அதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எமது மக்கள் இந்த உண்மை யைக் கண்டுகொள்வதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள் என்றும், சர்வதேச சமூகம் இந்தக் கருமத் தில் உறுதியாகச் செயற்பட்டு உண்மையைக் கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார். இந்தக் கருமங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகள் மிக விரை வில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இதன்போது வாக்குறுதியளித்தனர். -இவ்வாறு மேற்படி சந்திப்பை ஒட்டி வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்