ஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் – ஒத்திவைப்பு விவாதம்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது.

நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

அத்துடன், தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்