ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நாளை!

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9.30 அளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலவரம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கூட்டணியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க செயற்குழுவின் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்