கனடா, பிரித்தானியா, இந்தியாபோன்ற 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 48 நாடுகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்களுக்கு அமுலில் இருந்த இந்த நடவடிக்கை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்