சஜித்துடன் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இன்று பேச்சு!

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்