ஓய்வூதியப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

ஓய்வூதியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பின்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கியதன் மூலம், இதற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இரு தரப்பினர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்