கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்