எரிபொருள் விலை திருத்தத்தை பரிசீலிக்க அரசு தீர்மானம்

இலங்கை நுகர்வோருக்கு நன்மைகளை வழங்குவதற்காக எரிபொருள் விலை திருத்தத்தை பரிசீலிக்க முடியுமென அரசு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நோக்கத்திற்காக உலக சந்தையின் நடத்தை கண்காணிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம், பொருளாதாரத்தை ஒரு நல்ல பாதையை நோக்கி கொண்டுச் செல்வதாகவும் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தைப் போல மக்களை ஏமாற்றாமல், மக்களை வலுப்படுத்த தற்போதைய அரசாங்கம் சாத்தியமான எல்லாவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று அரசாங்கம் வழங்கிய வரி சலுகைகள் உண்மையில் மக்களுக்கு சென்று சேர்கின்றனவா என்பதை அரசாங்கம் கவனித்து வருவதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்