சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் புதிய வேலைத்திட்டம்

சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களின் தண்டனை முடிந்ததும் அவர்களுக்கு உள்ளுர் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் ஒரு புதிய திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அவன்கார்ட் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக நிசங்க சேனாதிபதி, கைதிகளுக்கு முறையான பொறிமுறையின் கீழ் பயிற்சி அளிப்பது சமூகத்தை பாதுகாப்பானதாக மாற்றும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்