தமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்

தமிழ் சமூகத்திற்குள்ளேயே தற்போது பல புறக்கணிப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மையினரை புறக்கணிக்கின்றார்கள் என்றுதான் தமிழர்கள் யுத்தத்தை தொடங்கினார்கள்.

ஆனால் தற்போது, தமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன. எனினும் இவ்வாறான விடயங்களை யாராலும் அனுமதிக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது. எவரும் அடிமைகளாக பிறக்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்