4 ஆவது முறையாகவும் கரன்னகொடவிற்கு நோட்டீஸ்!

2008 – 2009 காலப்பகுதிக்குள் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னிலையாகியிராத முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு 4 ஆவது முறையாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

2008/2009காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11இளைஞர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்து அவர்களை கொலை செய்ததாக முன்னாள் கடற்பதைளபதி மற்றும்13பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்