ஜானு படத்தின் மூலம் 14 கோடி ரூபாய் வரை நஷ்டம் – வருத்தத்தில் சமந்தா

சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்குப்பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாகிவிட்டார்.

இந்நிலையில் சமந்தா தற்போது நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் யு-டர்ன், ஓ பேபி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் எடுத்தவரே தெலுங்கிலும் எடுத்தார்.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 21 கோடிக்கு விற்கப்பட்டதாம். ஆனால், இப்படம் தற்போது வரை 7 கோடி ரூபாய்தான் ஷேர் வந்துள்ளதாம்.

இதனால் ஜானு படத்தின் மூலம் ரூபாய் 14 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவை சமந்தாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்