அமெ. தூதரகம் முன்னால் தனி ஒருவர் ஆர்ப்பாட்டம் – சவேந்திர சில்வாவுக்கான பயணத்தடையை எதிர்த்து

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தனி நபர் ஒருவர் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் கைகளில் இலங்கையின் தேசியக் கொடியையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்