சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த வெளிநாட்டவர்கள்!

கண்டியில் பத்து வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்ட வெளிநாட்டு பிர​ஜைகள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி மெனிக்கும்புர பிரதேசத்திலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி தனது சிறிய தந்தையுடன் மெனிக்கும்புர பகுதியில் அமைந்துள்ள வாராந்த சந்தையொன்றுக்கு வந்த போது, சிறுமின் அருகில் வந்த வான் ஒன்றில் இருந்த சிலர் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சிறுமியின் சிறிய தந்தை அவர்களிடமிருந்து போராடி சிறுமியை மீட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக கடுகஸ்தொட பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

அவர் வழங்கிய தகவலை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடத்திய பொலிஸார் வாகன இலக்கத்தின் மூலம் குறித்த சந்தேக நபர்களை அடையாளம் ​கண்டு கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் பங்காளாதேஷ் பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்