கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதமளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்