வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் செல் ஒன்று கண்டெடுப்பு!

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் வீதியோரத்தில் செல் ஒன்று விஷேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதிக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தி விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதிக்குச் சென்ற அதிரடிப் படையினர் வெடிபொருளை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்கச் செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்