வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 33இல், 77 பயனாளிகள் உள்ளீர்ப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால், முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் முப்பத்தி மூன்றாங் கட்டமானது 14.03.2020 அன்றைய நாள், முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.

புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் முப்பத்தி மூன்றாங் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த, எழுபத்தி ஏழு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு 1280கிலோ அரிசி, மற்றும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஒவ்வொரு கிலோ பருப்பும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014அன்றைய நாள் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் பணப் பங்களிப்பில் நடைபெற்று முடிந்த முப்பத்தி மூன்றாங் கட்டத்துடன் இது வரையில் 1277குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கட்டத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் உறவுகளான திருவிணையர் குபேரன் சைலேந்திரி குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மகன் குபேரன் – செளியன் ஆகியோரின் 1,21,560.00 (ஒரு இலட்சத்து இருபத்தோராயிரத்து ஐந்நூற்று அறுபது) உரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வுதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு பயனாளிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

மேலும் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ப.தெய்வேந்திரம், வெளிச்சம் அமைப்பின் நிர்வாகிகளான செ.கிருத்தீபன், லி.துசியந் ஆகியோர் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்