உலக மக்கள் நலம்பெற வேண்டி மன்னார் பாடல் தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகாயாகம்

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்கள்
நலம்பெற வேண்டி மன்னார் பாடல் தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகாயாகம்
நடாத்துவதற்கான ஏற்பாடுகளை இவ் ஆலய திருப்பணிச்சபையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

உலக மக்கள் இன்றைய வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தனை
முடிவுறுத்தி உலக மக்கள் நலமபெற பிராத்திக்கும் வண்ணம் உலக நாயகனாக
வைத்திய நாதனாக கௌரிஅம்பிகையுடன் வீற்றிருக்கின்ற திருக்கேதீச்சரநாதர்
திருக்கோயில் சனிப்பிரதோச நாளான 21.03.2020 அன்று காலை 9.30 மணி தொடக்கம்
12 மணி வரை மகாயாகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இவ் ஆலய
திருப்பணிச்சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே அத்தருணம் உலக மக்கள் நலன்பெற வேண்டி தங்கள் இல்லங்களில் இருந்தே
இறைவனை பிராத்திக்கும்படி இவ் ஆலய நிர்வாகம் வேண்டி நிற்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்