கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 212 பேர் சிகிச்சை!

08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 18 பேர் மட்டுமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா வைரஸ் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படும் என புத்த சாசன அமைச்சு அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்