கொரோனாவை தடுப்பதற்கான பொலிஸாரின் முன்னோடி நடவடிக்கை!

உலத்தை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இலங்கையில் பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விஷேட முன்னோடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே கையை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்குள்ளே வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த செயற்பாடானது அனைத்து சமூகத்திற்கும் முன்னோடியாக விளங்குகின்றது. பொதுமக்கள் அனைவரும் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்