கூட்டமைப்பின் அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் வேட்புமனுவில் சற்றுமுன் ஒப்பமிட்டார்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் முதன்மை வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நியமிக்கப்பட்டு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் வேட்புமனுவில் சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

நாளை  வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்