‘கொரோனா’ தொற்றுக்கு இதுவரை 34 பேர் இலக்கு!

உலகத்தை அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வெளியாகிய அறிக்கையின் அடிப்படையில், நோய்த் தாக்கத்துக்குட்பட்டவர்கள் என மேலும் 6 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதிதாகத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் நாட்டில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டியின் மனைவியும் அடங்குகின்றார். இவர்களின் 13 வயது மகளும்  நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என அடையாளம் காணப்பட்டிருந்தார். தந்தை, தாய், மகள் மூவரும் கொழும்பு, அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தந்தையின் உடல்நிலை தேறி வருகின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்