அம்பிகா ‘அவுட்’ ஆனோல்ட் ‘இன்’

இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இழுபறி நிலவி வந்த நிலையில் அது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மானிப்பாய் தொகுதியில் களமிறக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் ஒரு தொகுதியினர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து அம்பிகாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவரைத் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அம்பிகாவின் இடத்துக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களாக மாவை.சோ.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இ.ஆனோல்ட், ரவிராஜ் சசிகலா, வே.தபேந்திரன், த.சித்தார்த்தன், பா.கஜதீபன், கு.சுரேந்திரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்