தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்ணகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிங்கபாகு சிவகுமார் ஆகியோர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசிய கட்சி சார்பில் நல்லதம்பிஸ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில், கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இவர்கள் அனைவரும் இன்று(புதன்கிழமை) அல்லது நாளை வேட்பு மனுக்களில் கையொப்பமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்