முன்னணிக்கு வாழ்த்து தெரிவித்த கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்த சுவாரஷ்யம் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கலின் இறுதிநாளாக நாளைய தினம் காணப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு இவர்கள் திரும்பி வருகின்றபோது மாவட்ட செயலகத்துக்குள்ளேயயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரைச் சந்தித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களான வி.மணிவண்ணன், ந.காண்டீபன் ஆகியோருக்குக் கைலாகு கொடுத்து பரஸ்பரம் வாழ்த்துத் தெரிவித்த சுவாரஷ்ய சம்பவம் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்