வெற்றி நமதே! – எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று தமிழர் தலைநகரில் சம்பந்தன் சூளுரை

“எந்நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. தமிழர் தாயகத்தில் வெற்றி எம் பக்கமே எப்போதும் இருக்கும். இம்முறை நாம் அமோக வெற்றி பெறுவது உறுதி.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேட்புமனுவைத் தாக்கல்”எந்நேரத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. தமிழர் தாயகத்தில் வெற்றி எம் பக்கமே எப்போதும் இருக்கும். இம்முறை நாம் அமோக வெற்றி பெறுவது உறுதி.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் நேற்றுக் காலை 10.30 மணிக்கு திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன்பின்னர் இரா.சம்பந்தன்  ‘தமிழ் சி.என்.என்.’ இணையத்துக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மக்களின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுமாறு அரசிடம் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. அவரின் உரை தேர்தல் பரப்புரையை மையப்படுத்தியே அமைந்திருந்தது. தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை.

எனவே, நாம் எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். தமிழர் தாயகத்தில் வெற்றி எம் பக்கமே எப்போதும் இருக்கும். இம்முறை நாம் அமோக வெற்றி பெறுவது உறுதி. எத்தனை கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் எம்முடன் போட்டியிட்டாலும் நாம் வெற்றி பெற்றே தீருவோம். தமிழ் மக்கள் எப்போதும் எம் பக்கமே இருக்கின்றார்கள். நாமே அவர்களின் உண்மையான பிரதிநிதிகள்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்