தமிழரசு கட்சியின் தீவிர உறுப்பினர் ஆசிரியர் வேல்முருகு ஐயாவின் அகவையை இட்டு வழங்கும் நினைவு செய்தி

20.03 1988 ம் ஆண்டு பொறுக்க முடியாத பொறாமை கொண்ட தீய சக்தியால் கடத்தி செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யபட்ட தமிழரசுக் கட்சியின் முன்னனி உறுப்பினர் திரு.வேல்முருகு ஆசிரியர் அவர்களின் 32வது அகவையில் நினைவு கூறுகையில் ஆத்ம திருப்தி அடைகிறேன் அன்னார் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தின் தமிழ் தேசியமும் தமிழ் உணர்வும் கொண்ட பாண்டிருப்பு மண்ணில் பிறந்தார் ஆசிரியராக தனது தொழிலை மேற்கொண்டு சிறு பராயத்திலே தமிழ் உணர்வாளராக ஆற்படுத்தி தந்தை செல்வா அவர்களின் பாசறையில் வளர்ந்து தானைத் தளபதி அமர்தலிங்கம்,சிவ சிதம்பரம்,காசி ஆனந்தன்,அறப்போர் அரியநாயம் போன்ற தலைவர்களோடு தன்னை அர்பனித்து தமிழர்களின் உரிமைக்காக செயற்பட்ட ஒரு செயல் வீரன் என்றால் மிகையாகாது.

அன்னாரின் 32வது நினைவு அகவையில் மேலும் தனது பாண்டிருப்பு இல்லத்தை கூட தந்தை செல்வா இல்லம் என பெயர் சூட்டி கட்சியை வளர்த்த ஒரு செயல் வீரன் அன்னை துரோபதி தாயின் ஆசியையும் பெற்றவர் 1952ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் வடகிழக்கிலே தமிழ் மக்களுக்கு சிங்கள அரசுகளால் ஏவி விடப்பட்ட பல அடக்கு முறை போராட்டங்களுக்கு தமிழ் தலைவர்களுடன் உடன் இருந்து பல போராட்டங்களையும்,உண்ணா விரதங்களையும்,அகிம்சை வளியிலே அம்பாறை மாவட்டத்தில் சார்பாக தன்னை அற்பணித்து செயல்பட்டவர் வேல்முருகு ஜயா அவர் என்றும் தமிழ் மக்கள் மனங்களில் குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களில் குடி கொண்டு உள்ளார். அவருக்கு  நினைவு கூருகையில் ஆத்ம திருத்தி அடைகிறேன் எனக் குறிப்பிட்டார் கவீந்திரன் கோடீஸ்வரன்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்