மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு ஒன்ராறியோ அரசு தீர்மானம்

ஒன்ராறியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 260 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது மாகாணத்தின் மொத்த எண்ணிக்கையை 1,966 ஆகக் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தொற்றுக்குள்ளான 291 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 125 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 51,629 சோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4,280 பேர் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.