சிறிதரனின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதிப்பங்களிப்பில் தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளில் சுயதொழில் மேற்கொள்கின்ற 30 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் துர்க்காபுரத்திலுள்ள வலி.வடக்கு பிரதேசசபைஉறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தள ஆசிரியருமான லயன் சி.ஹரிகரனின் இல்லத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபையில் துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன், வலி.காமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவருமாகிய தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்